
மலேசியாவில் gummy மிட்டாய் தொண்டையில் சிக்கி 10 வயதுச் சிறுவன் மாண்டான்.
அந்தத் தகவலைச் சிறுவனின் உறவுக்காரப் பெண் உறுதிப்படுத்தியதாக Harian Metro செய்தி கூறியது.
முகமது ஃபாமி ஹஃபிஸ் முகமது ஃபக்ருடின் (Mohamad Fahmi Hafiz Mohamad Fakhruddin) எனும் அச்சிறுவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக இதற்குமுன்னர் கூறப்பட்டது.
மாண்ட சிறுவனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments