
ரஷ்யாவின் தவறான தகவலின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டிய நிலையில், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகாரி என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்தப் போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், போருக்கு முக்கிய காரணம், ஜெலன்ஸ்கி என குற்றம் சாட்டிய டிரம்ப், அவரின் செயல்பாட்டிற்கு 4 மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும் என விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரை நிறுத்துவதற்கு முதுகிற்கு பின்னால் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், ஐரோப்பிய நாடுகளின் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், ஜெலன்ஸ்கி, தேர்தலை சந்திக்காத சர்வாதிகாரி என விமர்சித்த டிரம்ப், பைடனை நல்ல ஊதுகுழலாக அவர் பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டினார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments