Ticker

6/recent/ticker-posts

Ad Code



கர்வத்தை அடக்கிடீங்க.. இந்திய நன்மைக்காக கோலி, ரோஹித் வெச்சு இந்த ட்ரெண்ட் தொடரனும்.. பதான் கோரிக்கை


இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முடிவை எடுத்துள்ளார்கள். முன்னதாக ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கூட இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் தங்களுடைய மாநிலத்திற்காக உள்ளூரில் விளையாடுவார்கள்.

இது போக சர்வதேச கிரிக்கெட்டில் ஃபார்மை இழந்து தடுமாறும் போது லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் கூட ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தங்களது பழைய ஆட்டத்தை மீட்டெடுத்து மீண்டும் ஜொலித்துள்ளார்கள். ஆனால் ஐபிஎல் வந்தது முதல் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் ரஞ்சிக்கோப்பையை மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால் அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

இதை பிசிசிஐயும் சமீப வருடங்களாக பெரியளவில் கண்டு கொள்ளவில்லை. மறுபுறம் ஐபிஎல் பணத்தால் கர்வத்தை பெற்ற இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை காயத்திலிருந்து குணமடைந்த போது ராகுல் டிராவிட், ஜெய் ஷா ஆகியோர் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதைக் கேட்காத அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை.

அதனால் பல வருடங்கள் கழித்து விழித்துக் கொண்ட பிசிசிஐ அவர்களை மதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கியது. அத்துடன் இந்தியாவுக்காக விளையாடும் அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவது அவசியம் என்று அறிவித்தது. இதற்கிடையே கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.

அதனால் கடுப்பான பிசிசிஐ ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லையெனில் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்று சமீபத்தில் அதிரடியாக அறிவித்தது. அதனால் வேறு வழியில்லாத ரோஹித் சர்மா 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து கடந்த வாரம் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து விராட் கோலி தற்போது விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இது தொடர வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுடன் உள்ளூரில் இளம் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதை பார்ப்பது சிறப்பாக உள்ளது. இது கடந்த பல வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது நடக்கிறது. அது இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமானது. இந்தியாவில் உள்ளூரில் விளையாடுவது பற்றிய தற்போதைய விதிமுறைகள் ட்ரெண்ட் தொடரும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

crictamil


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments