
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக எர்டோகன் வந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 ஒப்பந்தங்களை அவர் மேற்கொண்டார்.
பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.தீர்மானங்களைப் பின்பற்றி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் முயல வேண்டும். துருக்கி எப்போதும் காஷ்மீர் சகோதரர்களுக்கு ஆதரவாகவே இருக்கும். மக்களின் நலன் கருதி இதை இரு நாடுகளும் செய்ய வேண்டும் என்றார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments