Ticker

6/recent/ticker-posts

Ad Code



மழை காரணமாக மாபெரும் அவமானத்தில் இருந்து தப்பிய பாகிஸ்தான் அணி – இருந்தாலும் மோசமான சாதனை


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் மூலம் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது இதுவரை 8 முறை நடைபெற்று முடிந்துள்ள வேளையில் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் மோதி வருகின்றன.

அந்த வகையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே தங்கள் விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி லீக் ஆட்டம் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதே வேளையில் குரூப் பி பிரிவில் எந்த இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றிக்கு தகுதிபெறும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். இந்நிலையில் இந்த தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி ஒரு மோசமான சாதனையில் இருந்து தப்பியுள்ளது.

அதாவது இந்த தொடரின் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட அவர்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இருந்த வேளையில் இன்றைய போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருந்தால் புள்ளியையே பெறாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன் அணி என்ற மோசமான சாதனையை நிகழ்த்திருக்கும். ஆனால் மழை காரணமாக அவர்கள் ஒரு புள்ளியோடு சற்று கௌரவத்துடன் வெளியேறி உள்ளனர்.

அதேபோன்று இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளில் பாகிஸ்தான் அணியை தவிர மற்ற ஏழு அணிகளிலும் உள்ள வீரர்களில் யாராவது ஒருவர் சதம் அடித்துள்ள வேளையில் பாகிஸ்தான் அணியில் மட்டும் இந்த தொடரில் யாரும் சதம் அடிக்கவில்லை என்கிற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments