
பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணி ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
சென்ற வாரம் விமானம் செனகலிலிருந்து புறப்பட்ட பின்னர், பயணிக்கு எதிர்பாராவிதமாகப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
விமான ஊழியரான ஜோயி விமானத்தில் பயணம் மேற்கோண்ட மருத்துவருடன் சேர்ந்து பிரசவத்திற்கு உதவி செய்திருந்தார்.
குழந்தை எந்தவொரு சிக்கலுமின்றி நல்லபடியாக பிறந்தது.
குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர் உறுதிசெய்ததாக பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது.
ஜோயி குழந்தையைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் படத்தையும் அது பதிவிட்டது.
குழந்தைக்கு ஃபாந்தா என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
1 Comments
இறைவன் செயல்
ReplyDelete