Ticker

6/recent/ticker-posts

Ad Code



உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்படலாம்: டிரம்ப்


உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர வரும் வாரங்களில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருக்கிறார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தபோது, திரு டிரம்ப் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

ஐரோப்பிய நாடுகள் உக்ரேனில் அமைதிக் காக்கும் திட்டத்தை ரஷ்ய அதிபர் வரவேற்பதாகத் திரு டிரம்ப் கூறினார்.

ரஷ்யாவில் வெளியிடப்பட்ட பொது அறிக்கைகளுக்கு முரணாக திரு. டிரம்ப் அவ்வாறு சொன்னார்.

பல நாடுகள் அமைதிக் காக்கும் படையினரை உக்ரேனுக்கு அனுப்புவதற்குத் தயார் என்று திரு மக்ரோன் கூறினார்.

ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவைப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

போர் மோசமாவதற்கு முன்னதாக அதை தடுத்து நிறுத்துவதே இலக்கு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 

ஆனால் அதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என்று கூறிய திரு மக்ரோன், அமைதி உடன்பாட்டின் பெயரில் உக்ரேனைச் சரணடையச் செய்யமுடியாது என்று கூறினார்.

seithi

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments