
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப்போன்றே இற்றைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் சம்பந்தமான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும் அதனோடு தொடர்புடைய குழுக்கள் மேற்படி புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை வலுவிழக்கச்செய்விக்கும் நோக்கத்துடன் நாட்டின் உறுதிநிலையை சீர்குலைக்கும் நிலைமையை நிர்மாணிக்க முயற்சி செய்து வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளைப்பாறிய சிரேஷ்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன வலியுறுத்துகிறார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (22) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளைப்பாறிய சிரேஷ்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய சம்பவங்கள் நேர்ந்தமை உங்களுக்கு ஞாபகமிருக்கும். இற்றைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். ஆட்கொலைகள் இடம்பெற்றன. அதைப்போலவே ஒருசிலர் தாக்கப்பட்டார்கள். ஒருசில நேரங்களில் மிகவும் பயங்கரமான தேசிய பாதுகாப்பிற்கு பலம்பொருந்திய சவாலாக அமைந்த தாக்குதல்கள் இடம்பெற்றன. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றவை.
இந்த அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. மீண்டும் ஆரம்பித்தது மாத்திரமன்றி அவை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பான ஒருசில சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். ஒருசிலர் தொடர்பான புலன்விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருசிலர் தொடர்பில் விசாரணைகள் முடிவுற்று விரைவில் வழக்குத் தொடரப்பட உள்ளன.
அதைப்போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி எம்மனைவருக்கும் தெரியும். நாங்கள் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்து முந்திய விசாரணைகளில் வெளிக்கொணரப்படாத தோற்றப்பாடுகளை இனங்கண்டு அவை பற்றி வெற்றிகரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றவேளையில் அந்த விசாரணைகளை குற்றுயிராக்கவும் ஒருசில கும்பல்கள் செயலாற்றி வருகின்றன எனும் தகவல் எமக்கு உளவுப் பிரிவுகள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பற்றிய புலன்விசாரணைகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அந்த நபர்களை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம். அதனை நாம் தெளிவாகவே இனங்கண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இந்த கும்பல்களுக்கு இந்த விசாரணைகளை மூடிமறைக்கவும் இந்த நாட்டின் உறுதிநிலையை சீர்குலைக்கவும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” என்று குறிப்பிட்டார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments