Ticker

6/recent/ticker-posts

Ad Code



உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவர்.. மீன் குழம்பில் விஷம் வைத்த மனைவி -பகீர் பின்னணி!


கணவனுக்கு மீன் குழம்பில் விஷம் வைத்து மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கட்டியங்குப்பத்தை சேர்ந்தவர்கள் கோபாலக்கண்ணன்- விஜயா தம்பதியினர்.இவர்களுக்குத் திருமணமாகி 27 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லை. சமையல் தொழிலாளியான கோபாலக்கண்ணன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்த கோபாலக்கண்ணன், அதன்பிறகு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வாயில் நுரைதள்ளிய நிலையில் கோபாலக்கண்ணன் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அவரது மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை ராதா கிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மனைவி விஜயாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்கு முரணாகப் பதிவில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது விஜயாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.இதனை அறிந்த கோபாலக்கண்ணன் மனைவியை எச்சரித்து வேலைக்குச் செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்துள்ளார்.

கள்ளக்காதலுக்குக் கணவர் இடையூறாக இருந்ததால் மீன் குழம்பு வைத்து அதில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனைச் சாப்பிட்ட கோபாலக்கண்ணன் வாயில் நுரை தள்ளித் துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து விஜயாவை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ibctamilnadu

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments