Ticker

6/recent/ticker-posts

Ad Code



டிரம்ப்பின் அதே பாணி..! ஜெர்மனியில் ஆட்சியை பிடித்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ் - வாழ்த்திய அமெரிக்க அதிபர்


ஜெர்மனி தேர்தலில், சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் பாணியில் வாக்குறுதி அளித்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ஜெர்மனி நாட்டில் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி அமைச்சரை அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் திடீரென பதவி நீக்கம் செய்தார். அதனால், ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தின் தொடர்ச்சியாக, அங்கு முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலாஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளார். கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு, சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியே பெரும் பங்கு வகித்ததாகத் தெரிகிறது. ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்தவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெரும்பான்மை வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளன. வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மெர்ஸ், "ஜெர்மனியில் இனி மீண்டும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சி நடைபெறும்” என்றார்.

1955-ம் ஆண்டு ஜெர்மனியின் பிரிலோன் நகரில் பிறந்தவர் மெர்ஸ். இவரது குடும்பம் சட்ட நிபுணர்கள் பின்னணி கொண்டது. 1972-லேயே சிடியு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட மெர்ஸ், 2000-ம் ஆண்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார். 2002-ல் அப்பதவி முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு சென்றது. பின்னர், அரசியலில் தான் ஓரங்கட்டப்படுவதாகக் கூறி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார் ஏஞ்சலா. அவர் பதவியை ராஜினாமா செய்தபின்னர் மெர்ஸ் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனாலும் உடனடியாக அரசியலில் மீள்கட்டமைப்பு அவருக்கு சாத்தியப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் பிரவேசித்தார். 2022-ல் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர் தற்போது அதிபராக உயர்ந்துள்ளார்.

மெர்ஸ் வெற்றியை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்காவைப் போலவே ஜெர்மனி மக்களும் முட்டாள்தனமான கொள்கைகளைப் புறம்தள்ளியுள்ளதாக" கூறியுள்ளார். எரிசக்தி மற்றும் குடியேற்ற விவகாரத்தில் ஜெர்மனி மக்கள் சரியான முடிவை எடுத்து தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

news18


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments