உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள வழிமுறை மற்றும் அதன் உண்மையான விவரங்கள் சில நாட்களில் வெளிப்படும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் (Negombo) உள்ள தேவாலயம் ஒன்றின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முன்னாள் தலைவர்கள் தங்கள் நேர்மையையும் பொறுப்பையும் மறந்து, அதிகாரத்தைப் பெறவும் பராமரிக்கவும் எவ்வளவு ஊழல் நிறைந்த, விரும்பத்தகாத மற்றும் அழிவுகரமான செயல்களைச் செய்தார்கள் என்பது இப்போது வெளிப்பட்டு வருவதாகவும் கர்தினால் கூறியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலும் அத்தகைய ஒரு அழிவுகரமான செயல் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, அந்த நபர்கள் உண்மையை மறைக்க எவ்வளவுதான் முயன்றாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள வழிமுறையும் அது பற்றிய உண்மையும் குறுகிய காலத்தில் வெளிப்படும் என கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.
ibctamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments