Ticker

Ad Code



எலோன் மஸ்க்கை நாடு கடத்தவும்....அமெரிக்காவில் போராட்டம்!


கலிபோர்னிய , புளோரிடா மேலும் பல மாகாணங்களில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும்,
செல்வந்தர்  எலோன் மஸ்க்குக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடைபெற்றது.

டோனல்ட் ட்ரம் பதவியேற்று ஒரு சில நாட்களில் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தன் சொந்த மக்களுக்கு எதிராகவே பல மாற்றங்களை எடுத்து அமெரிக்கா மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று திரள்கின்றது.முக்கியமாக உலகில் நடந்த ,நடக்கின்ற அணைத்து அட்டூழியங்களுக்கும் அமெரிக்காவுடன் தோள்கொடுத்து நின்ற ,கனடா ,மற்றும் ஐரோப்பா நாடுகள் ,இன்று அமெரிக்காவுக்கு எதிராக கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அரசுத் துறைகளில் எலோன் மஸ்க்குக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கண்டித்தும் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா  நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

எலோன் மஸ்க்கை நாடு கடத்துமாறு,போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி பதாதைகள் ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments