
பிரேசிலில் இணையச் சாவல் ஒன்றில் பங்குபெற்றதாய்ச் சந்தேகப்படும் 14 வயதுச் சிறுவன் மாண்டான்.
இறந்த பட்டாம்பூச்சிகளைத் தண்ணீரில் கலந்து, அந்தக் கலவையை ஊசி வழியாகத் தமது உடலில் சிறுவன் செலுத்தினான்.
அதனால் அவனுக்குக் கடுமையான உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.
7 நாளுக்குப் பிறகு அவன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதலில் சிறுவன் அவனது தந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தபோது அடிபட்டதாகக் கூறினான்.
அதன் பின்னரே இறந்த பட்டாம்பூச்சிகளைத் தண்ணீரில் கலந்து, கலவையை வலது காலில் ஊசி வழி செலுத்தியதை ஒப்புக்கொண்டான்.
சிறுவனின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் சம்பவம் குறித்த விசாரணையைத் தொடரவிருப்பதாய்க் காவல்துறை தெரிவித்தது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments