
எலான் மஸ்க்கின் டெஸ்லா இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்க பூர்வாங்க பணிகளை ஆரம்பித்துள்ளது. மும்பை, டெல்லியில் 13 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது.
பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியுடன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சந்தித்தார். அப்போது கார் தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்குவது பற்றி மஸ்க் ஆலோசித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, வணிகத்தை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட 13 பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதாக டெஸ்லா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பின்படி மும்பை மற்றும் டெல்லியில் 13 வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
அந்தவகையில் நிதியமைச்சக தரவுகளின்படி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குஜராத், ஆந்திர பிரதேசத்தில் ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக மும்பை மற்றும் டெல்லி, ஐதாராபாத்தில் தலா 2 ஷோரூம்களை டெஸ்லா நிறுவனம் திறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments