
தனிப்பட்ட தகராறு தொடர்பான அமைதிக்கு பங்கம் விளைவித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டான் பிரியசாத், கடந்த செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (13) அவர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், வெல்லம்பிட்டி பொலிஸார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனாவல, சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments