
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு ஈராண்டுத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதிருக்கும் வீடுகளை வரும் ஏப்ரல் முதல்தேதி தொடங்கி 2027 மார்ச் 31ஆம் தேதி வரை வெளிநாட்டவர் வாங்க முடியாது என்று ஆஸ்திரேலிய நிதியமைச்சர் ஜிம் சாம்மர்ஸ் (Jim Chalmers) அறிவித்தார்.
போதுமான வீடுகள் இல்லை என்ற நெருக்கடியைச் சமாளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
அந்த ஈராண்டுத் தடை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது பின்னர் மறுஆய்வு செய்யப்படும் என்று சாம்மர்ஸ் சொன்னார்.
ஆஸ்திரேலியாவில் வீட்டுடைமை ஒரு பெரிய பிரச்சினையாகக் கடந்த ஆண்டு (2024) உருவெடுத்தது.
வரும் மே மாதத்துக்குள் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் அது ஒரு முக்கிய விவகாரமாகத் தலைதூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடையின் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 1,800 வீடுகள் உள்நாட்டு மக்களுக்காக ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments