
கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அம்லாவுடன் அவர் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வரும் பாபர் அசாம் சமீப காலமாக ஃபார்ம் இழந்து இருந்தாலும், அவர் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போது பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அப்போது அவர் 6000 ஒருநாள் போட்டி ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அவர் 126 போட்டிகளில் விளையாடி 123 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார். தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அம்லாவும் 123 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 136 இன்னிங்ஸ்களில் 6000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்து இருந்தார். இதே பட்டியலில் கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் அடுத்த இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் இருவரும் 139 இன்னிங்ஸ்களில் 6000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்து இருந்தனர்.
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 6,000 ரன்களை சேர்த்த வீரர்கள்
1. ஹாஷிம் ஆம்லா - 123 இன்னிங்ஸ்
2. பாபர் அசாம் - 123 இன்னிங்ஸ்
3. விராட் கோலி - 136 இன்னிங்ஸ்
4. கேன் வில்லியம்சன் - 139 இன்னிங்ஸ்
5. டேவிட் வார்னர் - 139 இன்னிங்ஸ்
இதற்கு முன் பாபர் அசாம் 5000 ஒருநாள் போட்டி ரன்களை விரைவாக எடுத்த வீரர் என்ற சாதனையையும் செய்திருந்தார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர் 97 போட்டிகளில் விளையாடிய நிலையில் 5000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்து சாதனை படைத்து இருந்தார். தற்போது ஃபார்ம் இழந்த நிலையிலும் அவர் 6000 ஒருநாள் போட்டி ரன்களை விரைவாக எட்டி இருக்கிறார். அவர் கடைசியாக விளையாடிய ஏழு ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் இரண்டு 50 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
mykhel

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments