
கராச்சி: சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்திருந்தது.
கராச்சியில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து டோனி டி சொர்ஸி மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர்.
டோனி டி சொர்ஸி 11 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது நபி ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி அறிமுக போட்டியில் விக்கெட் எடுத்த வயதான டெஸ்ட் போட்டி விளையாடும் வீரர் பெயரை முஹமது நபி பெற்றார். இதனையடுத்து கேப்டன் டெம்பா பெவுமா நிதானமாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரியான் ரெகுல்டன் 106 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.
ரிக்கல்டன் சதம் அடித்தபோது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது ரஷித் காணும், ரிக்கல்டன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.இதேபோன்று வெண்டர் டூசன் 46 பந்துகளில் 52 ரன்கள் சேர்க்க சிறப்பாக விளையாடிய ஏய்டன் மார்க்கரம் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முஹமது நபி இரண்டு விக்கெட்டுகளும், ஃபரோகி அஸ்மதுல்லா மற்றும் நூறு அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.சிஎஸ்கே வீரர் நூர் அகமத் ஒன்பது ஓவர்கள் வீசி 65 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நடப்பு சீசனில் முதல் மூன்று போட்டிகளில் ஐந்து வீரர்கள் சதம் அடித்திருக்கிறார்கள்.
mykhel

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments