
ஐசிசி 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கத்தாவில் சந்திக்கிறது. அந்தப் போட்டியில் விளையாடி இத்தொடரில் வெற்றியுடன் துவக்கி முதல் கோப்பையை வெல்வதற்காக பெங்களூரு அணி தயாராகி வருகிறது.
2008 முதல் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமைத் தாங்கியும் இதுவரை பெங்களூரு அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் பெரிய கிண்டல்களை சந்தித்து வரும் பெங்களூரு அணி இம்முறை டு பிளேஸிஸை கழற்றி விட்டு ரஜத் படிதாரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் மத்தியப்பிரதேசத்தை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.
தற்போது 30 வயதாகும் அடுத்த 5 வருடத்திற்கு பெங்களூரு அணியை வழி நடத்தும் நோக்கத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீண்ட காலம் பெங்களூரு அணியை வழி நடத்தப்போகும் அவருக்கு ஆர்சிபி ரசிகர்கள் அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 18வது வருடமாக பெங்களூரு அணிக்கு மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு. “இந்தப் பையன் அடுத்ததாக வந்து உங்களை நீண்டக் காலமாக வழி நடத்தப் போகிறார். எனவே அவருக்கு உங்களுடைய அனைத்து அன்பையும் கொடுங்கள். சிறந்த திறமையைக் கொண்ட அவர் சிறப்பான வீரர் என்பதை அனைவரும் அறிவோம். நல்ல பணிவையும் கொண்டுள்ள அவர் இந்த அற்புதமான அணியை சிறப்பாக முன்னோக்கி அழைத்துச் செல்வார்”
“அவருக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துள்ளன. இம்முறை பெங்களூரு அணி அற்புதமாக இருக்கிறது. நமது அணியில் சுவாரசியமான வீரர்கள் இருக்கிறார்கள். அணியில் நிறைய திறமை இருக்கிறது. எனவே தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இத்தொடரில் உதவி செய்வதற்காக உற்சாகமாக காத்திருக்கிறேன்”
“இத்தனை வருடங்களாக விளையாடியதைப் போலவே இம்முறையும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இந்த அணியில் இருப்பதை மிகவும் விரும்புகிறேன். இந்த பெங்களூரு அழகான நகரில் அற்புதமான சிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் விளையாடுவது சிறப்பானது. ஒவ்வொரு சீசனைப் போலவே இந்த வருடமும் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளேன். இந்த அணியில் 18 வருடங்களாக இருக்கிறேன். அதை மிகவும் விரும்புகிறேன்” என்று கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments