
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 200க்கும் அதிகமான வெனிசுவெலா (Venezuela) குடிமக்கள் எல் செல்வடோர் (El Salvador) சென்று சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கள்ளக்குடியேறிகள் ஆவர்,
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வார இறுதியில் 18 ஆம் நூற்றாண்டுப் போர்க்காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அது வெனிசுவெலா நாட்டவர்களை வெளியேற்ற வழியமைத்தது.
டிரம்ப் நிர்வாகம் அவர்களை வெளியேற்றக் கூடாது என்று அமெரிக்க நீதிபதி உத்தரவிட்ட சில மணி நேரத்தில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெனிசுவெலா குற்றக் கும்பல் உறுப்பினர்கள் 238 பேரும், MS-13 குற்றக் கும்பல் உறுப்பினர்கள் 13 பேரும் வந்து சேர்ந்ததை எல் செல்வடோர் அதிபர் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட அனைவரும் ஓராண்டுக்கு பயங்கரவாதத் தடுப்பு நிலையத்தில் வைக்கப்படுவர். அவர்கள் அங்கிருக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எல் செல்வடோர் அதிபர் சொன்னார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments