Ticker

6/recent/ticker-posts

மருதப்"பா"வரங்கம்-23

 

திருப்பாவை
 
"அடிகள் தோறும்  அந்தாதி"

மகிழ்வோம் அன்பில் உருகி

உருகி நின்றாள் உளமே நெகிழ்ந்தாள்
நெகிழ்ந்த ஆண்டாள் நினைவில் ஏங்கினாள்
ஏங்கிய பாங்கை இசையில் உரைத்தாள்
உரைத்த போதையில்  உறங்கா தெழுந்தாள்
எழுந்தவள் தோழிகள் எழுப்பிட நடந்தாள்
நடந்தாள் நாயகன் நறுந்தமிழ் பாடி
பாடி பனுவல் பழந்தமிழ் கொஞ்ச
கொஞ்சவே விழைந்தாள் கோகுலக் கண்ணனை
கண்ணனை தன்னுள் கணவனாய்க் கொண்டாள்
கொண்டதை ஊருக்கும் தந்தைக்கும் சொன்னாள்
சொன்ன வார்த்தையால் பெரியவர் சோகமானார்
சோகத்தில் பெண்ணை சேர்த்தார் அரங்கனிடம்
"அரங்கனும்" "ஆண்டாளை" அணைத்தே ஏற்றான்

ஏற்றது"லட்சுமி"அம்சம் அறிவோம்
அறிந்தே மகிழ்வோம் அன்பில் உருகி
  
"இலக்கியக்  கரையோரம்"

"நல்லோர் வழிநத்தல் நன்று"

இருக்கும் சுகத்தை இழந்துவிட என்றும்
தருக்கர்கள் தூண்டுவர் தாமாய்--

நெருப்பதுவே

எல்லாம் புரிந்தே எளிமையில் கூறுகின்ற
"நல்லோர்" வழிநடத்தல் நன்று:

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments