Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-31


பத்துப்பாட்டு, புறநானூறு போன்றவற்றில் உள்ள கபிலரின் பாடல் தல்ல செய்யுல் நடையிலும், மேற்சொள்ள கபிலரின் அகவற்பா எளிய நடையிலும் உன்னதால், இந்த அகவற்பா கபிலர் எழுதியது இல்லை என்று கூறுவது சரியில்லை. 

நல்ல செய்யுள் தடையில் எழுதிய புலவர்கன், எளிய நடையில் எழுதக்கூடாது என்பது சட்டம் ஒன்று எப்பொழுதுமே இருந்ததில்லையே. இந்த அகவற்பாவை கபிலரே ஏன் எழுதியிருக்கக் கூடாது என்று ஆய்ந்து பார்க்கும்போது, கபிலர் இந்த அகவற்பாவை எளியநடையுடன் காட்டினார் என்பது நமக்கு விளங்குகிறது.

ஏன்
ஆதியும் பகவனும், தனது ஏழாவது குழந்தையான கபிலரை, ஓர் அந்தணருக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததை நாம் முன்னர் அறிந்தோம். அந்தணர் குலத்திலே, ஆண் மகவுக்கு பூணூல் போட்டு விழா செய்வது மரபு என்பதை நாம் அறிவோம்.

அதன்படி, தமது கபிலருக்கும் பூணூல் அணியும் விழாவை ஏற்பாடு செய்தனர். கபிலரின் வளர்ப்புப் பெற்றோர்கன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். அவ்விழாவுக்கு வந்த உறவினர்கள் பலர் பல கேள்விகளைக் கேட்டனர். இந்த கபிலன் ஒரு வளர்ப்புப் பிள்ளைதானே, எந்த குலத்தில் பிறந்தானோ? எந்த இனத்தில் பிறந்தானோ? அந்தணரால் வளர்க்கப் பெற்றமையால் இவளை அந்தணன் என்று ஏற்றுக் கொள்ளலாமா? இவனுக்குப் பூணூல் விழா அவசியமா? இவனைப் பெற்றத் தாய் தந்தையர் யாரோ! ஊர் பேர் தெரியாத இவனுக்கு, இவனது பிறப்பு பற்றியும், குலம் கோத்திரம் பற்றியும் அறியாது. இவனுக்குப் பூணூல் போடுவது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. 

அந்தணர்களாக இருக்கக்கூடிய நமக்கு, இவனைப் பற்றிய உண்மை நிலை உணராது பூணூல் அணிவிப்பது சரியல்ல என, பூணூல் விழாவிற்கு வந்த சொற்பக் கல்வியறிவே பெற்ற சில அந்தணர்கள் வருத்தப்பட்டுக் கூறினர்.

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments