Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-184


குறள் 885.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

கட்சிக்குள்ளேயே கொழப்பம் வந்துட்டுன்னா, அது கொலையில போய் முடிஞ்சு பல தும்பங்ளைத் தரும். 

குறள் 887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

ஒரு  கட்சியில உள்ளுக்குள்ள சண்டை வந்து, பொறவு ஒத்துமையா இருக்க மாதிரி வெளியே மத்தவொளுக்கு காமிச்சுக்கிட்டாலும், உள்ளுக்குள்ள ஒத்துமையா இருக்க மாட்டாவொ. 

குறள் 888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

அரத்தை வச்சு தேய்ச்சா, தங்கம் தேஞ்சு போற மாதிரி, குடும்பத்துக்குள்ள வார சண்டை சச்சரவு அந்த குடும்பத்தையே நாசமாக்கிரும். 

குறள் 889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

எள்ளைப் பிளந்தா வரக்கூடிய சின்ன அளவு மாதிரி உள்ளுக்குள்ள வார பகை அந்த குடியையே கெடுக்கக் கூடிய அளவுக்கு கெடுதல் உண்டாக்கும். 

குறள் 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

ஒரு வேலையை நல்லா செஞ்சு முடிக்கக்  கூடிய தெறமை இருக்கக்கூடிய ஒருத்தனை மட்டம் தட்டாம இருக்கணும். அது தான் ஒருத்தனை காக்கக் கூடிய காவல்களிலேயே மொதன்மையானது. 

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments