Ticker

6/recent/ticker-posts

Ad Code



எம்எச் 370 விமானத்தைத் தேடுவதற்கான Ocean Infinity-இன் நிபந்தனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:


காணாமல் போன எம்எச் 370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடுவதற்கான Ocean Infinity உடனான சேவை ஒப்பந்தத்தின் விதிமுறை, நிபந்தனைகளுக்கு அமைச்சரவை இறுதி ஒப்புதல் அளித்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைச்சரவை இறுதி ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார். 

அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுடன், போக்குவரத்து அமைச்சகம் மலேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி Ocean Infinity உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

இது 15,000 சதுர மீட்டர் மதிப்பிடப்பட்ட புதிய பகுதியில் விமானத்தின் பாகங்களைக் கண்டறிய கடல் அடியில் தேடல் நடவடிக்கைகளை Ocean Infinity தொடங்கும்.

இந்தக் கொள்கையின் கீழ், விமானத்தின் பாகங்களில் கண்டுபிடிக்கப்படும் வரை, Ocean Infinity நிறுவனத்திற்கு அரசாங்கம் பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

nambikkai

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments