Ticker

Ad Code



இல்லாத ஊழியர்களை இருப்பதாகச் சொல்லி நிறுவனத்திடம் $3 மில்லியன் ஏமாற்றிய நிர்வாகி


சீனாவில் மனிதவள மேலாளர் ஒருவர் 22 போலி ஊழியர்களை உருவாக்கி அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி நிறுவனத்திடம் சுமார் 3 மில்லியன் வெள்ளியை ஏமாற்றியிருக்கிறார்.

இல்லாத ஊழியர்களை இருப்பதாகச் சொன்னது மட்டுமல்ல அவர்களை வேலையிலிருந்து நீக்கியதற்கு போனஸ் தந்ததாகச் சொல்லியும் நிறுவனத்தை அவர் ஏமாற்றினார்.

சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்ஹாயில் சம்பவம் நடந்தது.

வேலைக்கு ஊழியர்களை வழங்கும் நிறுவனத்தில் யாங் என்ற அந்த ஆசாமி பணிபுரிந்ததாக South China Morning Post தெரிவித்தது.

தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அனுப்பப்படும் ஊழியர்களின் சம்பளத்தை நிர்வகிப்பது யாங்கின் பொறுப்பு.

ஊழியர்கள் வேலையில் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும் கடமையை யாங் மட்டும் தனியாகச் செய்து வந்தார்.

சம்பள நடைமுறைகளை நிறுவனம் மறு ஆய்வு செய்யவில்லை.

அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் யாங்.

2014ஆம் ஆண்டு முதல் 22 போலி ஊழியர்களை உருவாக்கி அவர்களுக்கான சம்பளப் பணத்தைத் தம்முடைய சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டார்.

போலி ஊழியர்களில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் தவறாது சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் அவரை அலுவலகத்தில் பார்த்ததே இல்லை என்றதும் சந்தேகம் பிறந்தது.

புகார் செய்யப்பட்டது.

விசாரணைகளில் யாங்கின் பித்தலாட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அவருக்கு 10 ஆண்டு 2 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த வழக்குச் சீன சமூக ஊடகங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.

நிறுவனத்தின் நடைமுறைகளில் நிறையப் பிழைகள் இருப்பதாக இணையவாசி ஒருவர் பெருமூச்சு விட்டார்.

யாங் தம்முடைய செயலை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்றார் மனம் கொதித்த மற்றோர் இணையவாசி.

seithi

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments