Ticker

6/recent/ticker-posts

50 ரன்ஸ்.. சிஎஸ்கேவை கோட்டையில் மண்ணை கவ்வ வைத்து.. 17 வருட சோகத்தை மாற்றிய ஆர்சிபி சாதனை வெற்றி


ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் எட்டாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 196-7 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் 32 (16) ரன்னில் நூர் அஹ்மத் சுழலில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் செவிலியன் சென்றார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நங்கூரமாக விளையாடிய விராட் கோலியையும் 31 (30) ரன்னில் நூர் அஹ்மத் அவுட் செய்தார். மிடில் ஆர்டரில் தேவ்தூத் படிக்கல் அதிரடியாக விளையாடி 27 (14) ரன்னில் அவுட்டானார்.

அதே போல கேப்டன் ரஜத் படிதார் கொடுத்த 3 கேட்ச்களை சிஎஸ்கே வீரர்கள் தவற விட்டனர். அதைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய அவர் அரை சதத்தை அடித்து 51 (22) ரன்கள் எடுத்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக லிவிங்ஸ்டன் 10 ரன்கள் எடுத்த போது மீண்டும் நூர் அகமது சுழலில் சிக்கினார். கடைசியில் ஜித்தேஷ் சர்மா 12 (6), டிம் டேவிட் 22* (8) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் செய்தனர்.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 3, பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு ராகுல் திரிபாதியை 5 ரன்னில் அவுட்டாக்கிய ஹேசல்வுட் அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜை டக் அவுட்டாக்கினார். அடுத்து வந்த தீபக் ஹூடா 4, சாம் கரண் 8 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.

அதனால் மறுபுறம் போராடிய ரச்சின் ரவீந்திராவும் 41 (31) ரன்னில் அவுட்டானார்கள். போதாகுறைக்கு சிவம் துபே 19, அஸ்வின் 11 ரன்னில் அவுட்டாகி கைவிட்டனர். இறுதியில் ஜடேஜா25, தோனி 30* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 146-8 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தோல்வியை சந்தித்தது. அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு 17 வருடங்கள் கழித்து சென்னையை சேப்பாக்கம் கோட்டை மைதானத்தில் தோற்கடித்து சாதனைப் படைத்தது.

கடைசியாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூரு தோனி தலைமையிலான சென்னையை தோற்கடித்தது. அதன் பின் அங்கே நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் சென்னையிடம் தொடர்ந்து பெங்களூரு தோல்வியை சந்தித்தது. தற்போது அந்த மோசமான வரலாற்றை நிறுத்தி வெற்றி பெற்றுள்ள பெங்களூரு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அதனால் இந்த வருடம் கோப்பையை எங்களுக்கு எடுத்து வையுங்கள் என்று ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments