
இருள் மறைந்து விடியல் உதயமானது! மனாஸ் நகரம் சுறுசுறுப்பாகத் தொடங்கியது.
அதிகாலையில் எழுந்து ”பெட் கொfபி”யைப் பருகிய இர்வின்- காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நேர்த்தியான ஆடை ஒன்றை அணிந்தவனாக தனது சக்தியூர்தியில் வீட்டை விட்டும் வெளியேறினான்!
கலியாணத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை! அவனது நண்பன் செரோக்கி கானகத்தில் முதலிரவையும் பெண் ஜாகையில் இரண்டாம் இரவையும் சந்தோசமாகக் கடத்தியிருப்பான்!
தனக்கும் இப்படியானதொரு நாள் வராமலா போய்விடும்?
ஆனால் அவன் தனது முதலிரவைக் கானகத்தில் கழிக்கத் தேவையில்லை. விமானத்தில் பறந்துபோய் வேறொரு நாட்டில் பிரசித்தி பெற்ற ஹோட்டலில் கழிக்கலாம்!
புதுத்தம்பதிகளைப் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்க வேண்டுமென்ற அவா அவனை ஆட்கொண்டது!
மரவேரடிக்கு வந்தவன் - தனது சக்தியூர்தியை அங்கேயே
நிறுத்திவிட்டு, கானகத்து உடைகளைத் தன்னில் பொருத்திக்கொள்வான் வேண்டி செசோரக்கியின் ஜாகைப் பக்கத்துக் குகைக்குள் நுழைந்தவன் தனக்கென ஒதுக்கி வைத்திருந்த ஆடைகளைத் தேடலானான்!
குகைக்குள் காணப்பட்ட கல்லிடுக்குகள் எங்காவது ஒன்றில் செரோக்கி சொருகி வைக்கப் பட்டிருந்த ஆடைகளை, இர்வினால் தேடிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. கல்லிடுக்குகளை ஒவ்வொன்றாக இழுத்துத் கொண்டிருந்தபோது, அந்த "கருமஞ்சட்பை" தரையில் விழுந்து அதிலிருந்து புராதன நூல்கள் சிலவற்றோடு காகிதங்கள் சிலவும் தரையில் சிதறின!
கல்வியறிவில்லாத மனிதர்கள் வாழும் கானகத்துக் குகைக்குள் இவ்வாறான நூல்கள் எப்படி வந்தன? எவ்வாறு வந்தன?
இர்வின் சிந்திக்கலானான்!
இதே பையைப் பலமுறைகளில் இர்வின் செரோக்கியின் கைகளில் பார்த்திருக்கின்றான்!
அப்படியானால் செரோக்கி தன்னைப் பார்க்க வரும்போது ஏன் இந்தப் பையைத் தன்னோடு எடுத்து வந்தான்?
பையையும் அதற்குள்ளிருந்த புராதன நூல்களையும் பார்த்ததும் இர்வினுக்குள் கேள்விகள் பல எழலான !
விறுவிறென்று நூல்களையும், காகிதங்களையும்
பைக்குள் திணித்துவிட்டு, பையை இருந்த இடத்திலேயே கல்லிடிக்கினுள் சொருகி வைத்துவிட்டு, தனது கானகத்து ஆடைகளை அணிந்தவனாகவும் - முகத்தில் வர்ணங்களை அப்பிக்கொண்டவனாகவும், ரெங்க்மாவின் ஜாகை நோக்கி நடக்கலானான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments