
62 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மேத்யூ பிரவுன்லி, 59 வயது சாதனையை முறியடித்தார். 3 போட்டிகளில் 6 ரன்கள் எடுத்தார்.
தனது 62 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, மேத்யூ பிரவுன்லி என்பவர் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி பால்க்லாந்து தீவுகள் - கோஸ்டா ரிகா ஆகிய அணிகளுக்கிடையிலான சர்வதேச டி20 போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், மேத்யூ பிரவுன்லி என்ற 62 வயது கிரிக்கெட் வீரர், தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
இதுவரை 3 போட்டிகளை விளையாடியுள்ள அவர், மொத்தமாக 6 ரன்களை எடுத்துள்ளார். மேலும் ஒரு ஓவர் மட்டும் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் உள்ளார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் துருக்கி அணிக்காக ஒஸ்மான் கோக்கர் என்பவர் 59 வயதில் அறிமுகமானதே சாதனையாக இருந்தது. அவர் ருமேனியா அணிக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு களமிறங்கினார். தற்போது அந்த சாதனையை மேத்யூ பிரவுன்லி முறியடித்துள்ளார்.
மேலும் சி அக்யூஸ், சி.எம்.ரோக்கா, எஸ். கன்சோய் ஆகியோர் இந்த பட்டியலில் முறையே 3, 4 மற்றும் 5-ஆவது இடத்தில் உள்ளனர். இதில் சி அக்யூஸ் மற்றும் எஸ். கன்சோய் ஆகியோர் துருக்கி அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments