
முதாட்டி ஒருவர் 7 வயது பேரனை ரூ.200-க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாட்லியா கிராமத்தில் வசித்து வருபவர் 7 வயதான மந்த் சோரன். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு காணமல் போன நிலையில் அவரது மனைவியும் கொரோனாவில் இறந்து போனார். இந்த சூழலில் பாட்டியின் அரவனைப்பில் மந்த் சோரன் இருந்து வந்தார்.
ஆனால் வயது மூப்பு காரணமாக மூதாட்டியால் பேரன் மந்த் சோரனை கவனிக்க முடியவில்லை. இதனால் மூதாட்டி சோரன் ராய்பால் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
அங்கு இவரது உடல்நிலை மோசமடைந்ததால் பாட்டி மற்றும் பேரன் இருவரையும் பராமரிக்க அவர்கள் சிரமப்பட்டனர்.அதன்பின்னர் மூதாட்டி தனது பேரனுடன் சகோதரி வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார்.
தொடர்ந்து வறுமையில் வாடிய அந்த மூதாட்டி தனது பேரனை கவனித்துக் கொள்ள முடியாத காரணத்தால் ரூ.200 விற்று விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.
விசாரனையில் அந்த மூதாட்டி நிதி ஆதாயத்திற்காக பேரனை விற்கவில்லை, தன்னால் பேரனைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை, உணவளிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 7 வயது சிறுவன் மீட்கப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments