Ticker

6/recent/ticker-posts

மொத்தமாக சரிந்த கட்டிடம்.. மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சம்!


மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாங்காக் நகரில் பல அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதனால் அச்சம் நிலவி வருகிறது.

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக நில அதிர்வு பதிவு செய்யப்பட்டது. மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுவதும், ஒரு கட்டிடத்தில் நீச்சல் குளம் குலுங்கி அதில் இருந்த தண்ணீர் மாடியில் இருந்து தெருவில் கொட்டுவது போன்ற காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இதேபோல், பாங்காக் நகரில் தற்போது கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் முழுவதுமாகச் சரிந்து விழுந்தது. இதனால், உயிரிழப்பு அச்சம் நிலவியுள்ளது. எனினும், இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

இதற்கிடையே, மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது பீதியைக் கிளப்பியுள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments