
சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு முன்னோக்கி செல்ல முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
“ஐக்கிய மக்கள் சக்தி சீரழிந்திருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயமாக அக்கட்சி பாரிய பின்னடைவை சந்திக்கும். பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சஜித் பிரேமதாசவின் பலவீனம் மற்றும் அவரின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாகவே நான் அந்த கட்சியை விட்டு விலகினேன். நான் மட்டுமல்ல, அக்கட்சியில் இருந்து சம்பிக்க, ராஜித்த, வெல்கம போன்ற பிரபலமானவர்களும் விலகிச் சென்றார்கள். இம்தியாஸ் பகீரும் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார்.
அந்தக் கட்சி மறுசீரமைக்கப்படாவிட்டால், அந்த தலைவருடன் அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை. அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சிலருக்கும் எதிர்காலத்தில் வெற்றிகரமான அரசியலை செய்ய முடியாது. சஜித்துக்கு இந்த நாட்டை பொறுப்பேற்று வழிநடத்தும் அளவுக்கு பலம் இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது?” என்றார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments