'ஹனாமி'யை அனுபவிக்கத் தயாராகும் ஜப்பானியர்கள்!

"சகுரா" பருவம் என்பது ஜப்பானில் வருடத்தின் ஒரு காலம் மட்டுமல்ல; ஒரு கலாச்சார நிகழ்வுப் புதுப்பித்தலின் சின்னம் மற்றும் மிக அற்புதமான இயற்கை காட்சிகளில் ஒன்றுமாகும்.
2025 வசந்த காலத்தில் ஜப்பானியர் 'ஹனாமி' அனுபவத்தை அதிகப்படியாகச் சுவைக்கலாம். சமீபத்திய தரவுகளின்படி, இந்த மாதத்தின் பிற்பகுதியில், மேற்கு நோக்கி காண்டோ பகுதியிலிருந்து செர்ரி மலர்கள் பூக்கும் எனவும், டோக்கியோவில் எதிர்வரும் 28ம் திகதி பூக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் திகதி முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வானிலை மாற்றத்தின் காரணமாக ஜப்பானுக்குச் செல்வோர் துல்லியமான இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, அங்கு 'ஹனாமி'யை அனுபவிக்கலாம்.
5 மார்ச் 2025 அன்றைய ஜப்பான் வானிலை ஆய்வுக் கழகத்தின் செர்ரி ப்ளாசம் முன்னறிவிப்பு புதுப்பிப்பின் அடிப்படையில் ஜப்பான் முழுவதும் செர்ரி மலரைப் பார்க்கும் சிறந்த இடங்களாக, ஹொக்கைடோ- கோரியோகாகு பூங்கா, அமோரி- ஹிரோசாகி பூங்கா, டோக்கியோ- உயனோ பார்க், கியோட்டோ-அராஷியாமா, நாரா-யோஷினோ சிகரம், குமமோட்டோ- குமாமோட்டோ கோட்டை என்பன கொள்ளப்படுகின்றன.
ஜப்பானிய மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், செர்ரி மலர்கள் பூத்த மரத்தடியில் 'லைப்ரரி ஆஃப் சகுரா பஸ்" என்ற பெயரில் நடமாடும் நூலகம் உள்ளது.

இயற்கையை ரசித்துக் கொண்டே வாசிப்பது சகுரா பூத்துக்
குலுங்கும் காலத்தில் ஜப்பானியர் விரும்புகின்ற ஒன்றாகும்!. புத்தகப் பிரியர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பிரபல்யமான இடமான 'சகுரா' என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ள 'பஸ் நூலகம்' அதன் தனித்துவமான வடிவமைப்பில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நமது கண்டியிலும் இப்போது சகுரா பூக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக பேராதனைப் பகுதி, சகுரா மலர்களுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments