
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லையா, விழித்தே இருந்தீர்களா? அப்படியானால், இரண்டு நாட்களுக்கு வேலைக்குப் போகாதீர்கள் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த எச்சரிக்கை, வேகமாகப் பரவிவரும் நோராவைரஸ் தொற்று குறித்த எச்சரிக்கை ஆகும்.
ஆக, நோராவைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் விழித்தே இருந்தீர்களா?
இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடியதாகும். ஆகவே, தொற்றின் அறிகுறிகள் நின்றபிறகும், இரண்டு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கவேண்டும் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி எச்சரித்துள்ளது.
அத்துடன், அவ்வப்போது கைகளை சோப் மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவுதல் இந்த வைரஸ்தொற்று உங்களை பாதிக்காமல் தடுக்கும்.
உங்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்தால் கைகளைக் கழுவுதல், உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் என்றும் பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
lankasri

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments