Ticker

6/recent/ticker-posts

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி! நாடு கடத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் அழைப்பாம்... ஆனால்!


டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறார். குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் தாமாகவே வெளியேறுவதை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் அவர்களுக்கு (சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு) உதவித்தொகை வழங்கப் போகிறோம். அவர்கள் தாமாக வெளியேற விரும்பும்பட்சத்தில், நாங்கள் அவர்களுக்கு கொஞ்சம் பணத்தையும் விமான டிக்கெட்டையும் வழங்கப் போகிறோம், பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

அவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர வேண்டுமென்றால், முடிந்தவரை விரைவாக அவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்துவர அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம்" என்றார். முன்னதாக, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் விவகாரத்தில் டொனால்ட் டிரம்பின் அணுகுமுறை மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போது அந்த அணுகுமுறையில் இருந்து இது பெரிய மாற்றம் என கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், சட்டவிரோத குடியேறிகளை பிரச்னையின்றி எளிமையாக வெளியேற்றவும் இது உதவும் என கூறப்படுகிறது. மேலும், விவசாய பணியாளர்கள், ஹோட்டல் பணியாளர்கள் உள்ளிட்ட சில துறைகளில் பொருத்தமான தொழிலாளர்களை கண்டறியும் இந்த திட்டம் பெரியளவில் உதவும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த துறையில் பணியாற்றுபவர்கள் சட்டவிரோதமான குடியேறிகளாக இருந்தால், அவர் நாடு கடத்தப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்கப்படும் வாய்ப்பு அதிகம் என கூறப்டுகிறது.

இந்த நேர்காணலின்போது மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வீடியோ டிரம்ப் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நபர் மெக்ஸிகோவில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து, இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார். அவரின் 2 பிள்ளைகள் தற்போது அமெரிக்க குடிமக்கள். ஆனால், அந்த நபர் தற்போது சட்டவிரோத குடியேறி ஆவார். அவர் சமீபத்தில் டிரம்பிற்கு ஆதரவளித்து பேசியிருந்தார். மேலும், இங்கு குற்றங்களை செய்வோர்களை அவரவர் நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அந்த நபர் பேசியிருந்தார். 

இந்த நபர் குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப்,"நான் இந்த நபரை கவனித்தேன். நான் கூறுகிறேன், இதுபோன்ற ஒரு நபரை தான் நான் இங்கு வைத்துக்கொள்ள நினைக்கிறோம். நான் இதை சொல்வதால் எனக்கு எதிர்ப்பும் வரலாம்" என்றார். இவர் நாடு கடத்தப்படுவாரா என் கேள்விக்கு அவர்,"எனக்கு தெரிந்து அவருக்கு அந்த ஆபத்து ஏதும் இல்லை" என்றார். 

டொனால்ட் டிரம்பின் அரசு நிர்வாகம், சட்டவிரோதமாக குடியேறிவர்கள் தாமாக அவரவர் நாட்டிற்கு வெளியேறுவதை எளிமைப்படுத்த CBP Home செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேறும் தங்கள் விருப்பத்தை அறிவிக்க இந்த செயலி அனுமதிக்கிறது. இது சுயமாக தங்கள் நாட்டுக்கு திரும்பும் செயல்முறையை நெறிப்படுத்தக்கூடும்" என்றார்.

zeenews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments