பேருவளை மக்களின் தொடரும் பயனற்ற அரசியல் !

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை உதிக்கும் தேர்தல் ஆதவன் பேருவளை மண்ணிலும் உதித்துள்ளான் .
இதுவரை காலமும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு புலப்படாத மக்களின் கஷ்டங்கள் பிரச்சினைகள், இன்ப துன்பங்கள், அத்தனையும் தேர்தல் வெளிச்சத்தில், கண் கெற்றிருந்த அரசியல்வாதிகளின் கண்களில் தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது.
இதனை அடுத்து மக்களின் கஷ்டங்களை நினைத்து முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் வாதிகள், குடிசையில் வாழும் குடிமகனுக்கும் ஒரு வாக்குறிமை உண்டு என்பதை தேர்தல் காலம் என்பதால் தற்போதே உணர ஆரம்பித்துள்ளனர்.
இதனால் இதுவரையில் A/C வாகனங்களில் ஜன்னல்களை மூடி மின்வெட்டும் வேகத்தில் பயணித்த அரசியல்வாதிகள், தேர்தல் வெளிச்சத்தினால் வறிய மக்களின் நிலமைகளை கண்டு, உச்சம் வெயிலிலும் உச்சியில் இருக்கும் குடிசைகளை நோக்கியவர்களா..........!
எதிர்வரும் ஆறாம் திகதி வரையில்...?
பேருவளை மக்களின் அரசியலைப் பொறுத்தவரையில், ஊரின் அபிவிருத்தியையும், மக்களின் எதிர்கால வாழ்க்கையினையும் இரு குடும்பங்களே தீர்மானிக்கின்றனர்.
தேர்தல்கள் வரும்போது ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்க்கைக்காக, அரசியல் கொள்ளையர்களின் வலையில் சிக்கி, ஆசை வார்த்தைகளில் கழுதைகளாக மாறிவிடும் மக்களின் கழுத்தில் பயணம் செய்து இந்த அரசியல் வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
பேருவளை தேர்தலைப் பொறுத்தவரையில் ஜாஹிலீயாக்கால மக்களைப் போல, காலங்காலமாக நிலவிவரும் இரு குடும்பங்களின் பரம்பரையான பகைமையே பேருவளை மக்களின் அரசியலை தீர்மாணிக்கின்றது. பல தசாப்தங்களாக நிலவி வரும் பகைமைகளின் மத்தியில், யார் பலசாலி எனும் பலத்தை தீர்மானிக்கவே மக்களின் வாக்குப்பலம் கொள்ளையடிக்கப்படுகிறது.
ஒரு புறத்தில் 18 வருட ஆளும் அரசியலில் தொடர்ந்தும், பாரளுமன்ற உறுப்பினராக, சபாநாயகராக, ஆளுநராக, சில வேலைகளில் நாட்டின் ஜனாதிபதியாகக்கூட இருந்தும், சமூக நலனுக்காகவும், ஊர்மக்களின் நல்வாழ்வுக்காவும், நன்றாக படித்து முன்னேற நான்கு நல்ல பாடசாலைகூட அமைக்கவில்லை. சில சிந்தனையற்ற மக்களிடம் இவை பற்றிக் கதைத்தால்........
நாங்கள் பரம்பரை யோம்பி.....!
இப்படி ஒரு கூட்டம்.
மறுபுரம், அரசியல் வாதிகளின் தரப்பில், அவ்வாறு நல்ல பாடசாலைகளை அமைத்து மக்கள் முன்னேறிவிட்டால் நம் பரம்பரைக்கு எதிர்காலம் இல்லை. ஆகவே இந்தக்கூட்டம் நமது சுவரொட்டிக்கு பசை பூச, கழுதைகளாகவே இருக்கட்டும், அப்போதுதான் இந்தக் கழுதைகளின் கழுத்தில் ஏறி காலாகாலத்திற்கு நாமும் எமது பரம்பரையும் பயனிக்கலாம் என சிந்தித்து கோழிப்பாலைக் கொடுத்தே காலங்காலமாக கழுதைகளாகவே மக்களை வாழவைக்கும் சதிகாரக்கூட்டம் மறுபக்கம் .
இன்னொரு புறம் மின்சாரக் கம்பியும் கனுவும், மக்களின் தலையில் விழுந்து செத்தாலும் பரவாயில்லை. கான்களும் கால்வாய்களும் அடைத்து வெள்ளம் வந்து மக்களை அள்ளிச் சென்றாலும் நகர சபை அதிகாரம் நம்மிடத்தில் தான் இருக்கவேண்டும். மாட்டுத் தலைக்கு விடக்கூடாது என அதிகார தோரணையில் மறுகூட்டம்.
இன்னொரு புறம் ,
என்ன இருந்தாலும் "எங்களின் வாக்கு எங்கட ஹாஜியாருக்குத்தான்" என இன்னொரு கூட்டம்.
ஹாஜியாரால் அரசியல் காலங்களில் ஒரு ஷான் வயிற்றுக்கு நாலு வேலை ஜீவனோபாயத்தைத் தவிர, இவர்களின் வாழ்க்கையில் இவர்கள் ஒன்றையும் அனுபவித்ததும் இல்லை. வாழ்க்கையில் அவர்கள் முன்னேறியதும் இல்லை. அவர்களால் வாழ்க்கையில் எதையும் அடைந்ததுமில்லை.
இவ்வாறாக மாறி மாறி இரு குடும்பங்கள் தங்களின் பரம்பரையான பகைமையை தீர்த்துக் கொள்ள வாக்குக் கொள்ளையில் இருக்க,
உலக அதிசயங்களில் ஒன்றாக கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கிராமமும் வெள்ளத்தில் மூழ்கும் அளவுக்கு ஊர் பின்னடைந்துள்ளது.
ஊர் அபிவிருத்தி எவ்வாறாயினும் 100 மீட்டரில் ஒரு கால்வாயை அமைத்து வறிய மக்களை வெள்ளத் துயரத்தில் இருந்து காப்பாற்றக்கூட துப்பற்ற ஒரு நகர சபையாக பேருவளை நகர சபை தலைகீழ் முன்னேற்றம் அடைந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, அரசியலுக்காக எதிரும் புதிருமாக பல தசாப்தங்களாக இருந்த அரசியல்வாதிகள், அரசியலுக்காகவும் மக்களை ஏமாற்றவும், வாக்குகளை கொள்ளையிடவும் நகமும் சதையும் போல் ஒன்று சேர்ந்து, மீண்டும் அரசியலுக்காக எதிரும் புதிருமாக மாறி, மீண்டும் தேர்தல் காலங்களில் ஏனைய வேட்பாளர்களை அபூஜஹில் என திட்டிய அந்த அபூஜஹிலும் அபூஜமீலும் தேர்தல் காலத்தில் இனைந்திரு ப்பதில் இருந்து பேருவளை மக்கள் சிந்திக்கவில்லை என்றால்......
உலகில் உயர்திணை தோற்றத்தில் வாழும் அஃறிணை வர்க்கமாகவே இவர்களை பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் பாடசாலைக்கு முன் எதிரே மாளிகை கட்டி வாழும் அரசியல் வாதியினால், நூறூ ரூபாவையாவது பாடசாலைக்கு வழங்க முடியாத ஊரில், அவர் தொடந்தும் தேர்தல்களில் வெல்வாராயின் இது சேவையின் வெளிப்பாடா மடத்தனத்தின் உச்ச கட்டமா என்பதுதான் தெரியவில்லை.
ஊரில் ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருந்த போதிலும், நளீம் ஹாஜியாரும், ரிபாய் ஹாஜியாரும் ஊரில் இருக்கும் பாடசாலைகளுக்கு வசதிகளை அமைத்துக் கொடுக்கவில்லை என்றிருந்தால்.....!

இன்னும் எமது ஊர் பிள்ளைகள் இடிந்து விழும் சுவருக்கு கீழே தான் கல்வி கற்று இருக்க வேண்டும். மாறி மாறி வந்த அரசியல் அரக்கர்களால் ஊருக்கு ஒன்றுமே நடக்கவில்லை.
அந்த இரு பெருந்தகைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
சில முதலாளி மார்களினதும் அரசியல் வாதிகளினதும் வீட்டு முற்றவெளிகளும் வீதிகளும் சிங்கப்பூராக மாறினாலும், வறிய மக்கள் வாழும் பகுதிகளில் ஜனாஸாக்களை மையவாடிக்கு கொண்டு செல்லவேண்டியதில்லை. வீட்டுக்கு முன் வீதியிலே
அடக்கி விடலாம். அந்தளவு படுகுழிகள்.
பல தசாப்தங்களாக ஊர்மக்கள் வழங்கிய வாக்குகளால் அரசியல் வாதிகளின் வீடுகள் மாளிகைகளாக மாறி,
City Father என்ற பெயரில் அவர்களின் வியாபாரங்கள் வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறந்ததே தவிர, வறிய மக்களுக்காக எதுவுமே இல்லை.
இவர்களின் சேவைகளை மக்கள் எதிர்பார்த்து இருந்திருந்தால்.....
கடல் வற்றி மீன் உண்ணக் காத்திருந்த பூனை, குடல் வற்றிச் செத்த கதையாக பேருவளை மக்களின் நிலை மாறி இருக்கும்.
பேருவளை மக்களே இனியாவது சிந்தீயுங்கள். உங்கள் வாக்குகளை அளித்து இன்னெருவரை, முதலாளிமார்களை வழவைக்காமல், உங்களை வாக்குகளை உங்களை வாழவைக்கவும் உங்கள் பிள்ளைகளை வாழவைக்கவும் பயண்படுத்துங்கள்.
வெளியே சென்று படித்து உயர் பதவிகளில் உள்ள வசதி படைத்த ஊர் மக்களின் நிலமைகளை சற்று கண்திறந்து பாருங்கள்.
வசதி அற்ற மக்களுக்காக உங்களது ஊரில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இவ்வாறான வசதிகளை ஆரம்பிக்க தேர்தல் காலங்களில் சிந்தித்துச் செயல்படுங்கள்.
மக்களே பயனற்ற அரசியலில் இருந்து பயனுள்ள அரசியலுக்கு மாறுங்கள், நவீனமான உலகில் வித்தியாசமாக சிந்தீயுங்கள்.
கண் கண்ட திருட்டு ஆற்சியையும், பரம்பரையான குடும்ப ஆற்சியையும் கைவிட்டு, சவாலான உலகில் நவீன சவால்களை சந்திக்க உங்கள் சந்ததிகளை தயார் செய்ய உங்கள் வாக்குகளால் அத்திவாரமிடுங்கள்.
ஹாஜியார்ட மகனும் தொரையின் மகனும் தொடர்ந்தும் உங்கள் வாக்குகளால் தலைமை வகிக்க தலைப்படுவதை தவிர்த்து, மீன் வியாபாரியின் மகனும் கீரை வியாபாரியின் மகனும் முனேற வேண்டும் என்ற புதிய கோணத்தில் இருந்து சிந்தீயுங்கள்.
இதற்கா கிடைத்திக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.
உங்கள் வாக்குகளைப் பெற்று, தேர்தலுடன் விண்ணுலகம் போகும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்துங்கள். மீண்டும் அடுத்த தேர்தலுக்காகவே அவர்கள் மண்ணுலகம் வருவார்கள்.
70 கோடி கற்பனைத் தேரில் உங்களை ஏற்றிச் சென்று வெத்திமீ ராஜபுர வெள்ளத்தில் உங்களை மூழ்கடித்ததை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் காரியங்களை நிறைவேற்ற நகர சபைக்குச் செல்லும்போது, இன்முகத்துடன் வரவேற்கும் இனிய தலைவர் ஒருவரை தெரிவு செய்யுங்கள்.
பெரும்பான்மை சமூகம் சிந்தித்ததால், நாட்டில் மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மை சமூகமாய் சிந்தித்து நகரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
தேர்தல் காலங்களில் கோடியாக செல்வங்களை அல்லி வீசும் வேற்பாளர்கள் வாரி இறைப்பது அவர்களின் எதிர்காலத்திற்காகவே அன்றி உங்களுக்காக அல்ல என்பதை மறந்து விடாதீர்கள்.
அவ்வாறாயின் அவர்கள் ஒரு தேர்தலுக்கு அழிக்கும் பணத்தில் ஒரு பல்கலைக்கழகமே அமைத்திடலாம். நீங்கள் முன்னேறி விடக்கூடாது என்பதில் அவர்கள் அனைவரும் விழிப்பாக இருந்து கொள்வார்கள்.
வறிய குடும்பத்தில் பிறந்து, வறிய மக்களின் வாழ்க்கை வலிகளை உணர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். உங்களுடன் உங்கள், பிள்ளைகளின் உயர்வுக்காக தோலோடு தோல்நிற்பார்கள்.
ஊர் வளர்ச்சியும் உங்கள் வளர்ச்சியும் உங்கள் கைகளில்.
சிறந்த எதிர்காலத்திற்கு வித்திட அடுத்த மாதம் ஆறாம் திகதியுடன் ஆரம்பிப்போம்.
சிறந்த எதிர் காலத்திற்காக சிறப்பான தேர்தல் முடிவுகளுடன் அடுத்த மாதம் 7 ஆம் திகதி சந்திப்போம்.
நன்றி.
என்றும் உங்கள் நண்பன்
ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments