
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) உக்ரேன் அமைதிப் பேச்சில் ரஷ்ய அதிபருடன் விவாதிக்கவுள்ள அம்சங்கள் சிலவற்றைக் கோடிகாட்டியிருக்கிறார்.
நிலம், மின்சார நிலையங்கள், சொத்துப் பகிர்வு முதலியன குறித்துத் திரு விளாடிமிர் புட்டினுடன் (Vladimir Putin) இன்று (18 மார்ச்) தொலைபேசியில் பேசவிருப்பதாகச் சொல்கிறார் திரு டிரம்ப்.
உக்ரேனில் ஒரு மாதச் சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா வலியுறுத்தும் வேளையில் தலைவர்கள் இருவரும் பேசவிருக்கின்றனர்.
முன்னெப்போதையும் விட உடன்பாட்டுக்கான நேரம் நெருங்கி விட்டதாகச் சொல்கிறார் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கேரொலைன் லெவிட் (Karoline Leavitt).
அமைதி உடன்பாட்டைச் செய்து முடிப்பதில் அமெரிக்க அதிபர் உறுதியாய் இருப்பதாக அவர் சொன்னார்.
ரஷ்ய - அமெரிக்க அதிபர்கள் தொலைபேசியில் உரையாடவிருப்பதை உறுதி செய்த மாஸ்கோ, என்னென்ன பேசப்படும் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லை.
ரஷ்ய அதிபர் புட்டின் அமைதி உடன்பாட்டுக்கான விருப்பத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரிட்டனும் பிரான்சும் வலியுறுத்தியுள்ளன.
அமைதி உடன்பாட்டுக்கு ஒப்புதல் கொடுத்த உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் (Volodymyr Zelenksyy) வீரத்தை பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) பாராட்டினார். ரஷ்யாவும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய அதிபர் நிபந்தனையற்ற முழு போர் நிறுத்த உடன்பாட்டை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) கூறினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments