Ticker

Ad Code



“இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை” - பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்தால் சர்ச்சை!

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக இஸ்லாமியர்கள் பலரும் அடித்தே கொல்லப்பட்டனர். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையிலும், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இது மேலும் அதிகரித்தே காணப்படுகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுவர்களுக்கு கூட இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை தூண்டும் அளவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதனாலே வட மாநிலங்களில் வன்முறைகள் அதிகரித்தே வருகிறது. அதிலும் முக்கிய பண்டிகையின்போது இந்த தாக்குதல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த சூழலில் ஆண்டுதோறும் வட மாநிலங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் இந்த பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் தொழுகை செய்யக்கூட வெளியே வர வேண்டும் என்று, உ.பி. முதல்வர் யோகி தெரிவித்துள்ளது பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

அதாவது பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரி, ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமையில் கொண்டாப்படுவதால், அந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் வெளியே வரவேண்டாம். வண்ணங்களை அசௌகரியமாக உணரும் இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தே தொழுகை செய்வது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு காவல் அதிகாரி இவ்வாறு பேசியது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, “ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது. இஸ்லாமியர்கள் ஆண்டுக்கு 52 முறை வெள்ளிக்கிழமை தொழுகை செய்கிறார்கள். ஹோலி வண்ணங்களை அசௌகரியமாக நினைப்பவர்கள், வீட்டிலேயே இருந்துவிடுங்கள்.இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய மசூதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெளியே வர வேண்டாம்.” என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மசூதி செல்ல வேண்டாம் என்று உ.பி. பாஜக அரசு தெரிவித்திருப்பது பலர் மத்தியிலும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

மத நல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக வெற்று வார்த்தையை கூறி வரும் பாஜகவின் உண்மை முகம் மீண்டும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தாங்கள் இஸ்லாமியர்குக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறும் பாஜக, தனது செயல்களின் மூலம் இசுலாமியர்கள் மீது வெறுப்பை காட்டி வருகிறது. ஒரு மாநில முதலமைச்சரே ஒரு சமூகத்துக்கு எதிரானவற்றை ஆதரிப்பது நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

kalaignarseithigal

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments