Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருமணம் செய்யாவிட்டால் வேலை இல்லை: சீன நிறுவனத்தின் சர்ச்சை விதி!


சீன நிறுவனம் ஒன்று திருமணம் செய்யாதவர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக கூறியாதால், அங்கு வேலைப் பார்க்கும் இளைஞர்கள்  திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

முன்பெல்லாம் இந்தியாவில் ஒரு நபர் 10 குழந்தைகள் வரை பெற்று வளர்த்தனர். ஆனால், படிபடியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது ஒரு குழந்தையில் வந்து நிற்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை படித்து ஆளாக்கி வளர்ப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.

இதனால் மக்கள் தொகை குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்கனவே இந்த அச்சம் வந்துவிட்டது.

ஆம்! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக சீனா அறிவித்தது. 2024ல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது என்கிறது சீன அரசு.

இதுபோன்ற நிலையில்தான் சீன அரசு தனது நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க பல திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால், அப்படியும் எந்த முன்னேற்றம் இல்லை.

இந்த மக்கள் தொகை குறைவிற்கு இளைஞர்கள் திருமணம் செய்துக்கொள்ளாதது முக்கியமான காரணமாக இருக்கிறது. 

கடந்த ஆண்டு சுமார் 60 லட்சம் தம்பதிகள் மட்டுமே தங்கள் திருமணங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திருமணம் செய்யாமல் இருந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது. இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.5 சதவீதம் குறைவாகும்.. சீனாவில் 1986 முதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் சூழலில், 2024ல் தான் மிகக் குறைந்த திருமணங்கள் பதிவாகியுள்ளன.

திருமணங்கள் குறைவதால் குழந்தை பிறப்பும் குறைகிறது. இந்த இரண்டு காரணங்களும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. 

அதாவது 28 முதல் 58 வயதுக்கிடையே உள்ள நபர்கள் கண்டிப்பாக திருமணம் செய்திருக்க வேண்டும். விவாகரத்து பெற்றவர்களாக இருந்தால் மறுமணம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் இது தனிநபர் உரிமையில் தலையிடும் விவகாரமாக இருப்பதாக பலத்தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


kalkionline

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments