
மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இண்டியன்ஸ் அணி டெல்லியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்ற மும்பை இண்டியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் மூன்றாவது தொடரில் டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் போலவே மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டு போட்டித் தொடரில், மும்பை, உத்தரபிரதேசம், பெங்களூரு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதின.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. மும்பை பிரபோன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. முதலில் விளையாடிய ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்கள் எடுத்தார்.
150 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய டெல்லி அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து டெல்லி அணி தோல்வியடைந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி, மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments