ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி லக்னோவில் பதிமூன்றாவது போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் வேகத்தில் மிட்சேல் மார்ஷ் டக் அவுட்டானார். மறுபுறம் அதிரடி காட்டிய ஐடன் மார்க்கம் 28 (18) ரன்னில் லாக்கி பெர்குசன் வேகத்தில் நடையை கட்டினார்.
அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்களில் மேக்ஸ்வெல் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடிக் காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 (30) ரன்களில் சஹால் சுழலில் சிக்கினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஆயுஸ் படோனி 41 (33) ரன்கள் குவித்த போது விக்கெட்டை இழந்தார்.
கடைசி நேரத்தில் டேவிட் மில்லரும் ஃபினிஷிங் செய்ய முடியாமல் 19 (18) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் அப்துல் சமத் அதிரடியாக விளையாடிய 27 (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் லக்னோ 171-7 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு ப்ரியான்ஸ் ஆர்யா 8 ரன்னில் திக்வேஷ் ரதி சுழலில் விக்கெட்டை இழந்தார். அதனால் பிரியான்ஸ் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றுக் கொண்டிருந்தார். அவரிடம் வம்படியாக ஓடிச் சென்ற திக்வேஷ் எதையோ கையில் எழுதி வெளியே போங்கள் என்ற வகையில் வழி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்றப் போட்டியில் அவருக்கும் சேர்ந்து மற்றொரு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தமது பங்கிற்கு அதிரடி காட்டினார். இந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ப்ரம்சிம்ரன் அரை சதத்தை அடித்து 69 (34) ரன்கள் குவித்து திக்வேஷ் சுழலில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக வந்த நேஹல் வதேரா தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய 43* (25) ரன்கள் குவித்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் அரை சதத்தை அடித்து 52* (30) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 16.2 ஓவரிலேயே 177-2 ரன்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அதிரடியாக தங்களது இரண்டாவது வெற்றியைப் பெற்று அசத்தியது. குறிப்பாக திக்வேஷ் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோவை சொந்த ஊரில் நொறுக்கி வெற்றியின் பக்கம் நெருங்கக் கூட விடாமல் ஸ்ரேயாஸ் தலைமையில் பஞ்சாப் மற்றும் ஒரு வெற்றியை சுவைத்தது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments