Ticker

6/recent/ticker-posts

169 ரன்ஸ்.. கேரியரில் செய்யாததை ஆர்சிபிக்கு எதிராக ஒரே நாளில் செஞ்சு பதிலடி கொடுத்த சிராஜ்.. லிவிங்ஸ்டன் அசத்தல்


ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 14வது லீக் போட்டியில் நடைபெற்றது. அதில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு தடுமாற்றமாக விளையாடிய விராட் கோலி 7 (6) ரன்களில் அர்சத் கான் வேகத்தில் அவுட்டானார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த தேவ்தூத் படிக்கலை 4 (3) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். 

அடுத்ததாக ஐந்தாவது ஓவரை வீசிய அவருக்கு எதிராக 3வது பந்தில் மற்றொரு துவக்க வீரர் பிலிப்ஸ் சால்ட் 105 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு மிரட்டினார். ஆனால் அடுத்தப் பந்திலேயே அவரை 14 (13) ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய சிராஜ் தக்க பதிலடிக் கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரஜத் படிதாரும் 12 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அதன் காரணமாக 42-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பெங்களூரு அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடிக் காட்டிய ஜித்தேஷ் சர்மா 33 (21) ரன்கள் எடுத்த போது தமிழக வீரர் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். அப்படியே அடுத்ததாக வந்த க்ருனால் பாண்டியாவையும் 5 ரன்னில் சாய் கிசோர் அவுட்டாக்கினார். அதனால் 104-6 என பெங்களூரு மீண்டும் தடுமாறிய போது அதிரடியாக விளையாட முயற்சித்த லியம் லிவிங்ஸ்டன் கேட்ச் கொடுத்தார். 

ஆனால் தமது கைக்கே வந்த அந்த கேட்ச்சை பௌண்டரி எல்லையில் ராகுல் திவாட்டியா கோட்டை விட்டார். அதற்காக திவாட்டியா வருந்தும் அளவுக்கு நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டன் அரை சதத்தை அடித்து 54 (40) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் டிம் டேவிட் 32 (18) ரன்கள் அடித்த உதவியுடன் சரிவிலிருந்து தப்பிய பெங்களூரு 20 ஓவரில் 169-8 ரன்கள் குவித்தது.

குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பெங்களூரு அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வந்த சிராஜ் கடந்த சில சீசன்களில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக இந்த வருடம் பெங்களூரு கழற்றி விட்ட சிராஜை குஜராத் அணி வாங்கியது. இதற்கு முன் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணிக்காக அவர் 23 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆனால் அந்த 23 போட்டியில் ஒரு முறை கூட சிராஜ் 2 பேட்ஸ்மேன்களை கிளீன் போல்ட் ஆக்கியதில்லை. இருப்பினும் தற்போது பெங்களூருவுக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியிலேயே சிராஜ் 2 போல்ட் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் தன்னை நம்பாமல் கழற்றி விட்ட பெங்களூரு அணிக்கு எதிராக சிராஜ் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து பதிலடி கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments