Ticker

6/recent/ticker-posts

கணவனை வெளுத்து வாங்கிய மனைவி.. ரகசிய கேமராவால் வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்! - என்ன நடந்தது?


மத்தியபிரதேசத்தில் லோகேஷ் மஞ்சி என்பவரை அவரது மனைவி ஹர்ஷிதா ராய்க்வார் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தில் கணவனை சரமாரியாக மனைவி வெளுத்தெடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் லோகேஷ் மஞ்சி என்பவர் தான் அந்த அப்பாவி கணவர். 30 வயதான இவர் லோகோ பைலட்டாக பணியாற்றி வருகிறார். நல்ல வேலை நல்ல சம்பளம் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்ட லோகேஷ் கட்டினால் வரதட்சணை வாங்காமல் ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்கிறார். அதன்படி, பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த ஒருவரின் மகளான ஹர்ஷிதா ராய்க்வார் என்பவரை வரதட்சணை எதுவும் வாங்காமல் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் தான் அவருக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. “பொண்டாட்டின்னு நான் வந்த பிறகு அம்மாவைப் பார்க்க போகிறேன், நண்பர்களை சந்திக்க போகிறேன் என எங்கும் செல்லக் கூடாது” என தடை உத்தரவு போட்டிருக்கிறார் மனைவி ஹர்ஷிதா. அதையும் மீறி வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. மேலும் மனைவியின் தாயார், மைத்துனன் என ஒரு கும்பலே வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

மேலும், அவரின் மாமியார், “என் மகளுக்கு 3 பவுனின் செயின் வாங்கிக் கொடுங்கள், 5 சவரனின் நெக்லஸ் வாங்கிக் கொடுங்கள்” என டார்ச்சர் எல்லை மீறி போயுள்ளது. மைத்துனனும் அவ்வப்போது பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி அத்துமீறி தாக்குல் நடத்தும் அளவுக்கு சென்றிருக்கிறார். லோகோ பைலட் என்றால் வீட்டு வேலை செய்ய மாட்டாயா? என சரமாரியாக அடித்து உதைத்து வேலை வாங்கியிருக்கிறார். இதற்கு மேல் பொறுக்க முடியாது குருநாதா? என பொங்கி எழுந்த லோகேஷ் ஒரு செல்போனை மறைத்து வைத்து தனது மனைவிக்குள் இருக்கும் சொர்ணாக்காவை படம் பிடித்திருக்கிறார்.

அதில், கணவன் என்றும் பாராமல் கன்னத்திலேயே பளார், பளார், என பழுக்க பழுக்க வெளுத்திருக்கிறார் மனைவி ஹர்ஷிதா. மாமியார் தடுத்தும் மண்டை மீதே மடார் மடார் என அடித்திருக்கிறார் அந்த ஹிட்லர் மனைவி. கையெடுத்து கும்பிட்டும் கண்டுகொள்ளாத அந்த பெண் தனது காலால் முகத்திலேயே காட்டு காட்டு என காட்டியுள்ளார். அந்த வீடியோ காட்சிகளுடன் காவல்நிலையத்திற்கு ஓடிய கணவர், நாலு சுவத்துக்குள் நான் படும் பாட்டை பாருங்கள் ஐயா என காவலர்கள் முன் கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார்.

ஐயா தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என கதறிய லோகேஷிடம் புகாரை வாங்கிய போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போலீசாரிடம் தெரிவித்தால் குழந்தையை கொலை செய்து விடுவதாக மனைவி மிரட்டியதால் தான் இத்தனை நாட்களாக புகார் அளிக்க வரவில்லை எனக் கூறியிருக்கிறார் லோகேஷ் ஒரு முறை என் மனைவி கொசு மருந்தைக் கூட ஹர்ஷிதா குடித்து விட்டு தன்னை மிரட்டியதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments