
LSG vs MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி
ஐபிஎல் 2025-இன் 16வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் (4) மோதின. இரண்டு அணிகளும் இந்த சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு தோல்விகளை சந்தித்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றிருந்தனர். எனவே இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி தேவையான ஒன்றாக இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஹோம் கிரவுண்டில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. பவர் பிளேயில் மிச்சல் மார்ஸ் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவர் பிளே முடிவதற்குள் மிச்சல் மார்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு இறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் ரிஷப் பந்த் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஆயுஸ் பதோணி 30 ரன்களும், டேவிட் மில்லர் 27 ரன்களும் அடித்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், நிதானமாக ஆடிய மார்க்ரம் 38 பந்துகளில், நான்கு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 53 ரன்கள் அடித்தார். பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்த போதிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு கேப்டன் ஐந்து விக்கெடுகள் எடுப்பது இதுவே முதல் முறை. சிறிது கடினமான இலக்கை எதிர்த்து மும்பை களமிறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்
204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓப்பனிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வில் ஜாக்ஸ் 5 ரன்களுக்கும், ரியான் ரிக்கல்டன் 10 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். பிறகு களமிறங்கிய நமன் திர் மற்றும் சூரியகுமார் யாதவ் கூட்டணி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் அளித்தனர். அதிரடியாக ஆடிய நமன் திர் 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மறுபுறம் மீண்டும் பார்மிற்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். இருவரும் அதிரடியாக விளையாடினாலும் போட்டி மெல்ல மெல்ல லக்னோ பக்கம் சென்றது. கடைசி இரண்டு ஓவரில் 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் அந்த ஓவரை சிறப்பாக வீசினார். அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி பெற 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சிக்சர் போனாலும் மீதமுள்ள பந்துகளை ஆவேசஸ் கான் சிறப்பாக வீசினர். இதனால் இந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments