
டெஸ்லா உரிமையாளர் ஒருவர் தனது காரிடம் ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொன்னார். ஆனால் அந்த கார் ஜிம்மிற்கு அழைத்துச் சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சாக் ஜென்கின்ஸ் டெஸ்லா கார் வைத்திருக்கிறார். இவர், தனது காரின் ஃபுல் செல்ஃப் டிரைவிங் (FSD) அம்சத்தை சோதித்துப் பார்க்க முடிவு செய்தார். இது ஒரு மேம்படுத்தப்பட்ட டிரைவிங்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகும். இதன் காரணமாக "நான் இதுவரை செல்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் செல்" என்ற எளிய வாய்ஸ் கமெண்ட்-ஐ கொடுத்தார். கார் தன்னை ஒரு புதிய உணவகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கார் ஜிம்மிற்கு வெளியே நின்றது.
இந்த முழு சம்பவத்தையும் அவரது மனைவி வீடியோவாக பதிவு செய்தார். பதிவு செய்த இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வைரலாகும் வீடியோவில், "நான் இதுவரை செல்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் செல்" என்ற வாய்ஸ் கமெண்ட்டை கொடுத்தார் ஜென்கின்ஸ். இதனையடுத்து கார் ஸ்டார்ட் ஆகி, டிரைவ் செய்து, ஜிம்மிற்கு முன் நின்றது. இந்த கார் அவர்கள் எதிர்பாராத இலக்கை நோக்கி சென்றதை அடுத்து, ஜென்கின்ஸ் மற்றும் அவரது மனைவி ஹெய்லி சிரிப்பதுடன் வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் zachandhailee என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. இந்த வீடியோவானது பல சமூக ஊடக தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. வைரலான இந்த வீடியோவை பார்த்த எலோன் மஸ்க், சிரிக்கும் ஈமோஜியுடன் பதிலளித்தார். மேலும் பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு யூசர், டெஸ்லா காரானது சீட்டில் அழுத்தத்தை உணர்ந்த பிறகு, இது ஜிம்மிற்குச் செல்லும் நேரம் என்று நினைத்திருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், இது வேடிக்கையானது என்று கருத்து தெரிவித்தார். இன்னொரு யூசர், என் யூகம் சரியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. டெஸ்லாவின் FSD-யைப் பயன்படுத்தி நடக்கும் வேடிக்கையான சோதனைகளின் எண்ணிக்கையில், தற்போது ஜென்கின்ஸின் வேடிக்கையான சோதனையும் சேர்ந்துள்ளது. இது டிரைவர் அசிஸ்டன்ஸ் டெக்னாலஜியின் லெவல் 2 இன் கீழ் வருகிறது, அதாவது கார் தானாகவே இயங்கவும், அக்சலரேட் செய்யவும் மற்றும் பிரேக் போடவும் முடியும். ஆனால் ஓட்டுநர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments