Ticker

6/recent/ticker-posts

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாம்பழத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அளவோடு உண்பது மிகவும் முக்கியம். மாம்பழம் மூன்று முக்கிய கனிகளில் ஒன்று, மேலும் ‘பழங்களின் அரசன்’ என்ற பட்டமும் பெற்றுள்ளது.

100 கிராம் மாம்பழத்தில் சுமார் 60 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவ சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து மற்றும் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) மதிப்பு 51 என்ற குறைந்த அளவில் இருப்பதால், இதன் உணவில் கலந்து கொள்வது முற்றிலும் தவறல்ல.
 
எனினும், அதிகமாக பழுத்த மாம்பழங்கள் GI மதிப்பை உயர்த்தும் என்பதால், இவை சர்க்கரை உயரும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, மிகவும் பழுத்த வகையைத் தவிர்த்து, அளவுக்கேற்பத் தேர்வு செய்ய வேண்டும்.

மாம்பழம் சாப்பிடும் நாளில் மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொள்ளவும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த GI உள்ள பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஜூஸாக குடிக்காமல், முழுப் பழமாகவே எடுத்துக்கொள்வதே சிறந்தது.
 
சரியான நேரங்களில், குறிப்பாக காலை 11 மணியோ அல்லது மாலை நேரத்திலோ, ஒரு சிறிய அளவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை  எடுத்துக்கொள்வது ஏற்றது.

webdunia

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments