Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க தூதரகங்களை மூட முடிவு


அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுக் குறைப்புகளைக் கருத்தில் கொண்டு, 30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் கொன்ஸ்லேட் பிரிவுகளை மூடுவதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கவனத்தை செலுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் கொன்ஸ்லேட் பிரிவுகள் அடங்கும். சோமாலியா, ஈராக், மால்டா, லக்சம்பர்க், காங்கோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரான்சில் ஐந்து அமெரிக்க தூதரகங்கள் உள்ளன, அவற்றை மூடுவதற்கான திட்டங்கள் உள்ளன.

கூடுதலாக, ஜெர்மனி மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்களை மூடுவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

tamilmirror

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments