Ticker

6/recent/ticker-posts

Ad Code



உடல் எடை, ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க


தினமும் காலையில் சூர்ய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சூர்ய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்கும் ஒரு ஆசன முறை ஆகும். இதனை காலையில் தொடர்ந்து செய்வதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றது.

இரத்த ஓட்டம் சீராவதுடன், இதயத்தின் துடிப்பும், சகிப்புத்தன்மை மேம்படுகின்றது. லேசான இரத்த அழுத்த ஏற்ற இறக்ககங்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

அனைத்து தசைகளுக்குஅழுத்தம் அளிக்கப்பட்டு, தசைகளின் தளர்விற்கு உதவி செய்வதுடன், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவுகின்றது.

தினமும் காலை சூர்ய நமஸ்காரத்தை தொடர்ந்து செய்வதால், நரம்பு மண்டலத்தில் ஒரு அமைதியான விளைவை ஏற்படுத்துவதுடன், பதட்டத்தை குறைக்கிறது. 

உடல் எலும்புகளின் நெகிழ்வுத்தன்மைக்கும் உதவுவதுடன், இடுப்பு வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கின்றது.

சூர்ய நமஸ்காரத்தில் முன்னோக்கி வளைத்தல், பின் வளைத்தல் மற்றும் மைய ஈடுபாடு ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் வயிற்று உறுப்புகளை தூண்டுகின்றன. குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்தமாக இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

காலை வேளையில் சூர்ய நமஸ்காரம் செய்வது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் டையை மேம்படுத்தவும் உதவி செய்கின்றது.

மேலும் உடலின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டங்களையும் தருகின்றது.

manithan

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments