Ticker

6/recent/ticker-posts

Ad Code



இணையத்தை ஆக்கிரமிக்கும் ஜிப்லி!


இணையத்தில் தற்போது ChatGPTயில் புது வரவாக வந்திருக்கும் Ghibli-style படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்து வருகின்றது.

இந்த புதிய பட உருவாக்க அம்சம் இணையத்தில் புயலை கிளப்பி. பயனர்களை ஸ்டுடியோ கிப்லி பாணியில் அற்புதமான கலைப்படைப்பை உருவாக்க அனுமதிக்கின்றது.

ChatGPTல் தமது சொந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றி ஜிப்லி புகைப்படங்களைப் பெற்றுக் கொள்வதில் இணைய நேயர்கள் மும்முரமாக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

"My Neighbor Totoro" மற்றும் "Spirited Away."  போன்ற கிளாசிக்ஸை நினைவூட்டும் வகையில், ரசிகர்கள் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை கிப்லி உருவப்படங்களாக மாற்றுவதன் மூலம், இந்தப் போக்கு படைப்பாற்றலின் அலையைத் தூண்டியுள்ளது.

இந்த நிலையில், பயனாளர்கள் ஒரே நேரத்தில் இந்த அனிமேஷன்களை பயன்படுத்துவதால் சிக்கல்கள் எழுந்துள்ளதாக OpenAI நிறுவனத்தின் தலைமை அதிகாரி சேம் அல்ட்மென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல பயனர்கள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்துவதால் சர்வர் அதிக பரபரப்பாக செயல்படுவதாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனை சமநிலையில் வைத்திருக்க OpenAI நிர்வாகம் புதிய முடிவுகளை எடுத்து வருவதை அறிய முடிகின்றது. 

OpenAIயின் கருவிகள்  24 மணிநேரம் செயல்படுகின்றமையால், பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், அதிக சுமை, வேலைப்பளு காரணமாக அவர்கள் அழுத்தம் மிகக் கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனால்தான், சேம் ஆல்ட்மேன் தனது பதிவில் "எங்கள் பணியாளர்களுக்குத் தூக்கம் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.


செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments