Ticker

6/recent/ticker-posts

வக்பு சட்டம் : இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி


வக்ஃப் நிர்வாகக் குழுவில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் செய்வது செல்லும் என்றும் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து புதிய வக்பு சட்டம் அமலுக்கு வந்தது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,, விசிக, ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சி, முஸ்லிம் லீக், விஜய்யின் தவெக, என அரசியல் கட்சிகள் உட்பட மொத்தம் 73 வழக்குகள், வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் இன்று இந்த 73 வழக்குகளையும் விசாரிக்க தொடங்கியது.

இதன்படி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தைத் தொடங்கி வைத்தார். பல்வேறு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "வக்பு சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா? அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும்? இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா?ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துகளை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14,17ஆம் நுற்றாண்டுகளில் கூட சொத்துகள் வக்புக்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும்" என்று கூறினர்.

மேலும் வக்ஃப் நிர்வாகக் குழுவில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் செய்வது செல்லும் என்றும் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments