Ticker

6/recent/ticker-posts

”முதுகெலும்புள்ள களப்போராளி மு.க.ஸ்டாலின்” : நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி பேச்சு!


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ், "சூரிய மகள் கையில் புத்தகம் வைத்திருப்பது போன்ற சிலை உள்ளது. "பெண் விடுதலை வேண்டுமென்றால் கையிலுள்ள கரண்டியினை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள்" என்றார் பெரியார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எழும்புகளால் ஆனது அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதையத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியால் ஆனது.

அறநிலையத்துறை அமைச்சராக அல்ல அரணாக இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால் தான் ஆன்மீகத்தை சொல்லி ஆட்டையை போட நினைப்பவர்கள் இவரை பார்த்து பயப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

kalaignarseithigal

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments